Skip to content

வாலிபர் மர்ம சாவு… திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வெண்ணமுத்து பட்டியை சேர்ந்தவர் தவமணி வயது 29. இவரது மனைவி வாசுகி தேவி.திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது.

இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

தவமணிக்கும் அதே பகுதியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்துள்ளது.

இதனால் தவமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தாய் வீடான காந்தளூரில் வசித்து வருகிறார். தவமணி கடந்த இரண்டு வருடமாக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததாகவும், கள்ளத்தொடர்பில் இருந்த அகிலாண்டேஸ்வரிக்கு நகைகள், பணம் கொடுத்து உதவியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று தவமணிக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது.

இதில் தவமணி வீட்டில் இருந்தபோது கள்ளக்காதலியான அகிலாண்டேஸ்வரி தவமணி வீட்டிற்கு வந்து தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் கீழே விழுந்ததில் தவமணி மூச்சு பேச்சின்றி கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் தனது மகனின் மர்மம் இருப்பதாகவும் ,தனது மகனின் சாவுக்கு கள்ளக்காதலியான அகிலாண்டேஸ்வரி காரணம் என்றும், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்றும் போலீசாரை வலியுறுத்தினர். தொடர்ந்து மாத்தூர்

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் தவமணியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் மனைவி மற்றும் குடும்பத்தினர் உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டனர். மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை

(கள்ளகாதலி)…

நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு உள்ள திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் உரிய விசாரணை செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதனால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே கள்ளக்காதலியான அகிலாண்டேஸ்வரி தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *