சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தின் வரலாறு பாண்டிய
மன்னர்களிலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் சோழர் மற்றும் சேரர்களுடன் இணைந்து சிலம்பாட்டத்தை மேம்படுத்தினர். மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும்.
தமிழ் இலக்கியத்தின் சிலப்பதிகாரம், கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, சிலம்பம் தண்டுகள், வாள்கள், முத்துக்கள் மற்றும் கவசங்களை வெளிநாட்டு வணிகர்களுக்கு விற்பனை செய்வதைக் குறிக்கிறது. மதுரையில் உள்ள பழங்கால வர்த்தக மையம் ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் பண்டைய திராவிட மன்னர்களுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தவர்களால் பெரும்பாலும் வசித்ததாகக் கூறப்படுகிறது. சிலம்பாட்டம் அப்போது பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.
சிலம்பாட்டம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில், இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறிஞ்சி மலைகள் வரை இந்த கலை அதன் வரலாற்றைக் காட்டுகிறது. இப்பகுதியின் பூர்வீகக் குடிகளான நரிக்குரவர், காட்டு விலங்குகள் மற்றும் பிற தாக்குதல்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள சிலம்பாட்டத்தைப் பயன்படுத்தினர்.
சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு களத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது. இத்தகைய ஆட்டத்தை தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிலர் மீட்டெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் REHABINDIA CHARITABLE TRUST சார்பாக மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் 150 மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். இந்த போட்டியின் முக்கிய அம்சம் நமது தேசியக்கொடிக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் தேசிய கொடியை வடிவமைக்கும் விதத்தில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தினர்.