திருச்சி ரயில்வே ஜங்சனில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சள் பை பயன்பாட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் தீமை குறித்து பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பேரணிகள் என பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும்
முயற்சியாக திருச்சி ரயில்வே ஜங்சனில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை இயந்திரத்தை இந்தியன்ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அசோகன், ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன் IRTS ராமலிங்கம், IRTS செந்தில்குமார், , TNPCB Trichy சிவரஞ்சனி, TNPCB தேவகிஆகியோர் உடனிருந்தனர். இந்த இயந்திரத்தில் பத்து ரூபாய் நோட்டுகளோ அல்லது நாணயத்தையோ செலுத்தி மஞ்சள் பையை எளிதாக பெற இயலும். பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பையை ஒழிக்க விதமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த இயந்திரம் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.