தமிழ்நாடு குடியரசு தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மாலையில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பனானா லீப் உணவகத்தின்உரிமையாளர்
மனோகர் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
தாய் நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் ஹெப்சி சத்தியாராக்கினி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான கோவிந்தராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தைலா சில்க் சென்டர் உரிமையாளர் தொழில் அதிபர் டாக்டர். மணோஜ்குமார் கலந்து கொண்டார் கொளரவ அழைப்பாளர்களாக பாண்டியன் பிள்ளை அறக்கட்டளையின் நிறுவனர் சக்திவேல் தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ் S.R.சாரிடபள் டிரஸ்டின் நிறுவனர் ராஜசேகர் பெட்காட் அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் பாத்திமா கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை புதியபாதை அறக்கட்டளை அறங்காவலர் உலக சாதனையாளர் சேவரத்னா ஆர்ம்ஸ்ட்ராங் ராபி வரவேற்றார் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை பட்டு ராஜ், போவாஸ், அபிஷா, செல்வராஜ், பிரேமா, மகேஷ்வரி, சுதா, சாந்தி, பக்கிரிசாமி, ஹேமலதா, சிவபிரகாசம், தீபலட்சுமி, அருணாசலம், மதன், சகாயராணி, முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் செய்தனர்.
நிகழ்ச்சியில் பாடல் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியின் முடிவில் தாய்நேசம் அறக்கட்டளையை சேர்ந்த கீதா சரவணன் நன்றியுரையாற்றினார்