திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் ( 26 )இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ரவுடி பட்டியலில் உள்ளார். பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ரூபன் ( 35 ). இவர்கள் 2 பேரும் முதலியார் சத்திரம் காஜா பேட்டை பகுதியில் உள்ள மதுக்கடையில் தனித்தனியாக மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு வெளியே வரும்போது மணிகண்டனுக்கும் அப்பு என்கிற ரூபனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பு என்கிற ரூபன், அவருடைய நண்பர் நெல்சன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கையில் கத்தியால் குத்தி கிழித்தனர். இதில் காயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. இதேபோல் மணிகண்டனும், அவரது நண்பர் நிர்மலும் அப்பு என்கிற ரூபனையும், நெல்சனையும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இரு தரப்பினரும் இதுகுறித்து பாலக்கரை போலீசில் புகார் அளித்தனர் . புகாரின் பேரில் எஸ்ஐ அலாவுதீன் இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.