தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சியில் 3பேரும், கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர் . இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.