திருச்சி, முதலியாா்சத்திரம் முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (56). இவர் அப்பகுதியின் டீக்கடை யில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு டீக்கடை ஊழியரை கொண்டு சென்றபோது கலியபெருமாள் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.