திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மலைக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு டீக்கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 6 கிலோ கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து டீக்கடையில் விற்பனை செய்த ஸ்ரீரங்கம் தாலுகா கள்ளிக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் வயது (44) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.