Skip to content
Home » போண்டாவில் 5 ரூபாய் காயின்… திருச்சியில் பரபரப்பு..

போண்டாவில் 5 ரூபாய் காயின்… திருச்சியில் பரபரப்பு..

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் ( 63). இவர் காலை நண்பர்களுடன் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஹேண்ட் பால் விளையாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து மாவட்ட  எஸ்பி அலுவலகம் எதிரே திருச்சி – புதுக்கோட்டை சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மற்றும் போண்டா உள்ளிட்ட தின்பண்டங்களை நண்பர்களுக்கு வாங்கி வந்தார். அதனை நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து தின்றபோது ஒரு போண்டாவில் 5 ரூபாய் நாணயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *