திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆகாஷ் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பாலக்கரை கெம்ஸ்டோன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த சந்தோஷ் ( 21), திருப்பூரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 21) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தார். அவர்களிடமிருந்து பணம், இரும்பு ராடு / கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.