தமிழ் திரை உலகில் மிகப்பெரும் உச்சம் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை அவரது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து செய்து வருகிறார். வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் விஜய் ரசிகர்கள் சார்பில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.
அதில், “திருச்சி என்றாலே திருப்பம் தான் விரைவில் மாநாடு காத்திருக்கிறது தமிழ்நாடு…. வா தலைவா” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் மாநாடு ஏதும் நடத்த உள்ளாரா என்கிற சந்தேகம் அவர் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த விளம்பரம் செய்துள்ளவர்கள் தற்பொழுது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.