ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் புதிய அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும், ஒவ்வொரு மணல் குவாரியிலும் உள்ள விற்பனை கிடங்குகளில் குறைந்தபட்சம் 200 லாரிகளுக்கு லோடு செய்ய அனுமதிக்க வேண்டும்,மணல் லாரிகளுக்கு வாகன சோதனையின் போது ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் மாநில தலைவர் செல்ல.ராஜாமணி தலைமையில் நடந்தது. இதில் செயலாளர்
ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உள்பட 200-க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மணல் லாரி டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.