திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சம் இன்றி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ள 15 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வேண்டும்
எச்ஐவி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடினால் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள்
மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு அடைவார்கள் என்றும் மேலும் எச்ஐவி பரவும் விகிதம் அதிகரிக்கும் என்றும் எனவே மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் பாலச்சந்தர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இதில் நல சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.