தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற நாளில் ஒட்டுமொத்த தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது .மாவட்ட தலைவர் அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் சந்திரா, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணை தலைவர்கள் சாந்தி, ஷேக் முகமது, இணைச் செயலாளர்கள் பிச்சாயி , மல்லிகா, சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அல்போன்சா கோரிக்கை உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி தொடக்க உரையாற்றினார். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி நிறைவுறையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் கிரேஸ் லில்லி நன்றி கூறினார்.
திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….
- by Authour
