திருச்சி, சின்ன கம்மாளர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புருஷோத்தமன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பூர்வீக சொத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த புருஷோத்தமன் விற்ற வீட்டிலேயே சென்று அயன் பாக்ஸ் வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஜெயக்குமாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
