நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவரது கட்சியை சேர்ந்தவர் திருச்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன். இவர் யூடியூபர். சாட்டை துரைமுருகன், சூர்யா சிவா குறித்து தனது யூ டியூபில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இதுபோல சூர்யா சிவாவும் சமூக வலைதளங்களில் சீமான், சாட்டை துரைமுருகன் குறித்து கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் இவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவா, ஐகோர்ட், மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தனக்கும், தன் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தனக்கும், தன் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி உள்ளார். மனுவை வரும் 7ம் தேதிக்கு ஐகோர்ட் தள்ளிவைத்தது.