மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் சுங்கத் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் அழிக்கப்படட்டது. திருச்சி சுங்கத் துறையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிப்பது வழக்கம். அந்த வகையில் திருச்சி சுங்கத்
துறையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை, அரியலூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் நேற்று அழிக்கப்பட்டது. அந்த அழிக்கப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு பல கோடிஎன சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.