தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பூர், கோவை, நெல்லை, தென்காசி, நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று காலை காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் திருச்சியில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு இன்று வெயில் அடிக்கத்தொடங்கியது. கடந்த ஒருவாரமாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மழை பெய்யும் அடைமழை காலம் போல வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. இதனால் தரைக்கடை வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் ஏராளமான வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் இன்று மீண்டும் சூரியன் தென்பட்டதால் பொதுமக்களும், தரைக்கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடா்ந்து இனி வெயில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.