Skip to content
Home » திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…

திருச்சி மாணவர்கள் 1,000 விதை பந்துகளை உருவாக்கி அசத்தல்…

திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து கடந்த ஒரு வார காலமாக 1000 விதை பந்துகளை தயாரித்து உள்ளனர். இந்த விதை பந்துகளை தயாரிக்க மாணவர்கள் வேப்பங்கொட்டை, புங்கை மரம் கொட்டை, மாட்டு சாணம் வரட்டி, ஆட்டம் புழுக்கை ஆகியவற்றை கலவையாக வைத்து . பின்னர் சிறிதளவு ஈரமான களிமண்ணை எடுத்து மரப்பயிரின் விதையை நடுப்பகுதியில் வைத்து பந்து போல் உருட்டி விதை பந்துகளாக தயாரித்து வைத்துள்ளனர். இதனை

மழைக்காலங்களில் சாலையோரங்கள் அல்லது மரம் தேவைப்படும் இடங்களில் வீசி சென்றால் களிமண் கரைந்து விதைகள் தானாக முளைத்து விடும் என்ற நோக்கத்தில் உருவாக்கியுள்ளனர். குறிப்பாக திருச்சி மாவட்ட மண்வளத்திற்கு ஏற்றார் போல் வேப்பமரம், புளியமரம், புங்கமரம், நாவல் மரம், போன்ற முக்கியமான மர விதைகளை கொண்டு விதை பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விதை பந்தின் நோக்கம் மரங்கள் அதிக அளவில் அழிந்து வருவதால் அனைவரும் பசுமையான மரங்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *