திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் தோளூர் பட்டியை சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவன் இறந்தார். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு தோளூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பா சரவணன் மற்றும் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் தொழிலதிபருமான பா சரவணன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதி ரூ.10,000/- வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தன்னாலான உதவிகளை செய்வதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர்உடன் இருந்தனர்.
திருச்சியில் மாணவர்கள் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல்…
- by Authour
