Skip to content

திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் மாணவி தற்கொலை விவகாரம்… தாயார் கோரிக்கை…

திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியில் அரசு பார்வையற்றோர் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் மரணத்தில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என பார்வையற்றோர் சங்கங்கள் கோரிக்கை வைத்தனர் இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மாணவியின் தாய் கமலா மற்றும் அவருடைய வழக்கறிஞர் கோகுல்,

என்னுடைய மகளுக்கு பார்வை குறைபாடு உள்ளது அவரால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடியாது 12ஆம் வகுப்பு பொது தேர்வு முன்பு வீட்டிற்கு வந்த அவர் தேர்வு முடிந்த உடன் கல்லூரியில் சேர வேண்டும் என என்னிடம் நன்றாக பேசி தான் சென்றார் இந்த நிலையில் தான் பள்ளியில் இருந்து போன் செய்து உங்கள் மகள் இறந்து விட்டார் என கூறினார்கள் எப்படி என்று கேட்டால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்கள் இது நம்பும்படியாக இல்லை உண்மையான காரணம் என்ன என்று கேட்டால் அவள் காதலித்து வந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார்கள் பார்வை குறைபாடு உள்ள என்னுடைய மகள் எப்படி காதலிக்க முடியும் அவர்கள் கூறுவதை எல்லாமே சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளது எனவே இதில் நேர்மையான விசாரணை நடத்தி என்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்…

அதேபோல வழக்கறிஞர் கோகுல் மற்றும் அருள் ஷர்மா பேசுகையில் மாணவி தற்கொலை தொடர்பான வழக்கை காவல்துறை விசாரிக்காமல் வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து உள்ளோம் ராஜேஸ்வரியின் மரணம் தொடர்பாக காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவே தான் நாங்கள் இங்கு கோரிக்கையை வைத்துள்ளோம் என்றனர்…

error: Content is protected !!