Skip to content
Home » பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

பல்கலை. மாணவர் தற்கொலை….. திருச்சியில் சோகம்

  • by Senthil

திருச்சி தில்லைநகர் 8-வது கிராஸ் வடவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சபரீஸ்வரன் ( 21 )இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பட்டய படிப்பு பிபிஏ படித்து வந்தார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.  நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சிவசங்கர் தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சபரீஷ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!