திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் அரசு பள்ளி மாணவன் மவுளீஸ்வரன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் இறந்து போனார்.இதில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.பள்ளி
தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தோளூர்பட்டியில் இறந்து போன மாணவனின் வீட்டிற்கு நேரில் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முசிறி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் உடனிருந்தார்.