திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசுப் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பின்போது 10-ம் வகுப்பு மாணவன் மவுலீஸ்வரன் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவனுடன் படித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.