திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜுடி மெயில். ரயில்வே ஊழியர். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின் (16) இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார்.
ஜான் ஸ்டெபி ஜாக்குலினுக்கு நூடுல்ஸ் சாப்பிடுவது பிடிக்குமாம் இதனால் அடிக்கடி நூடுல்ஸ் உணவை விரும்பி சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு நூடுல்சை அவர் ஆன்லைனில் வாங்கி உள்ளார்.
அந்த நூடுல்சை சமைத்து சாப்பிட்டு விட்டு , கோக் குளிர்பானமும் குடிந்து விட்டு, இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் பார்க்கும் பொழுது ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில் இறந்து கிடந்தார்.
இந்த நிலையில் ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜான் ஸ்டெபி ஜாக்குலின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிலின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏற்கனவே பெண் இறந்து போய் உள்ளார் என்று நாங்களே வருத்தத்தில் உள்ளோம் தற்பொழுது எதற்காக நீங்கள் அந்த பெண்ணை உடலை பிரேத பரிசோதனை செய்ய விரும்புகிறீர்கள் எங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள் என அவரது உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் தங்களுக்கு புகார் வந்துள்ளது அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும் . 5 மணிக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால்தான் ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிலின் உடலை உங்களுக்கு பிரேத பரிசோதனை செய்து கொடுக்க முடியும் என கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து இன்று திருச்சி வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, மாணவி இறந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் சாப்பிட்டு நூடுல்ஸ் கம்பெனி குடோனை ஆய்வு செய்தோம். அங்கு 800 கிலோ நூடுல்ஸ் கைப்பற்றப்பட்டது. அவை அனைத்தும் காலாவதியானது. எனவே அவற்றை அழிக்க முடிவு செய்யப்பட்டது என்றார்.