திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்கலூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் தினமான இன்று 500க்கும் மேற்பட்ட மருத்துவம் படிக்கும் மாணவன் மாணவிகள் மருத்துவ லோகோ மற்றும் ஸ்டேட்டஸ் கோப் போல ஒன்று திரண்டு பலூனை தலைக்கு மேல் வைத்து. காற்றில் பறக்க விட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி டாக்டர்.பி.சி.ராய் நினைவு தினத்தினை தேசிய மருத்துவ தினமாக கொண்டாடி வரும் நிலையில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரியின் துணை மருத்துவப் படிப்பு மாணவ மாணவியர்கள் ஸ்டெதாஸ்கோப். வடிவில் நின்று
தங்கள் மருத்துவ ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக மாணவர்கள் தலைக்கு மேல் பலூனை நிறுத்தி பறக்க விட்டு பலூனை வெடித்தும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
அப்போது 500-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் திருச்சி மற்றும் இராமாபுரம் SRM கல்விக் குழுமங்களின் தலைவர் Dr.R.சிவகுமார் அவர்களது ஆலோசனையின்படி, திருச்சி வளாக இணை இயக்குனர் Dr. பாலசுரமணியன் மற்றும் டீன் Dr ரேவதி மருத்துவர்களைப் பாராட்டினர்.