திருச்சி கருமண்டபத்தில் கருப்புசாமி (65). கூலித்தொழிலாளி. இவர் கருமண்டபம் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது எஸ்எஸ்ஐ நடராஜன் அந்தவழியாக டூவீலரில் வந்துள்ளார். எதிர்பாரதவிதமாக எஸ்எஸ்ஐ நடராஜனின் டூவீலர் கருப்புசாமி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி பரிதாபமாக பலியானார். தற்போது டிஐஜி ஆபிசில் எஸ்எஸ்ஐ நடராஜன் பணிபுரிந்து வருகிறார் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ கைது செய்யக்கோரியும், சாலையை சரிசெய்யக்கோரியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். மேலும் உயிரிழந்த கருப்புசாமியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து எஸ்எஸ்ஐ நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
