திருச்சி மாவட்டம் இருங்களூர் ஊராட்சியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மற்றும் மைதானத்தில் நான்காயிரம் மாணவ மாணவிகளை வைத்து லட்சக்கணக்கான விதைகளைக் கொண்டு விதைப் பந்துகளை உருவாக்கி திருச்சி எஸ் ஆர் எம் கல்வி குடும்பம் உலக சாதனை படைத்துள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் அடர்வன காட்டை எவ்வாறு உருவாகியது என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் அறிவியல் மாணவ, மாணவிகள் உலகம் போற்றும் விதமாக உயர்ந்த லட்சியத்துடன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
நான்காயிரம் மாணவ மாணவிகள் கொண்டு கல்லூரி வளாகத்தில் 2 மணி நேரத்தில் 5 லட்சத்திற்கும் மேலான விதைப் பந்துகளை உருவாக்கினார்கள். இந்த விதைகளை பேரூராட்சி. நகராட்சி. ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொது மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்வு எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமங்களின் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது முனைவர் ஜெகதீஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முன்னாள் முதல்வரும், பிரபல தோல் நோய் நிபுணருமான டாக்டர் பாலசுப்பிரமணியன், இயக்குனர் முனைவர் மால்முருகன் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.