திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி, ராமாபுரம் வளாக சேர்மேன் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாள் திரைப்பட பாடல் மற்றும் கிராமிய பாடல்களுக்கு
மாணவ மாணவிகளின் அசத்தலான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நடன நிகழ்வில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, உள்ளிட்ட இந்த வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் முதன்மை இயக்குநர் சேதுராமன், இயக்குநர், மால்முருகன், துணை இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்கள், இருபால் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.