Skip to content
Home » ஸ்ரீரங்கம் புது பஸ் ஸ்டாண்டின் தற்போதைய நிலை என்ன?…

ஸ்ரீரங்கம் புது பஸ் ஸ்டாண்டின் தற்போதைய நிலை என்ன?…

  • by Authour

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. இதனால் திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து விட்டு தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி செல்ல ஏதுவாக இன்றைய தினம் வரை பேருந்து நிலையம் எதுவும் ஸ்ரீரங்கத்தில் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரத்திற்கு முன்பே சாலையில் இறங்கி செல்கின்றனர். இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் என எதுவும் இதுவரை எதுவும் இல்லை. எனவே ஶ்ரீரங்கத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அந்த பகுதியில் அதிகமாகி கொண்டே வந்தது. இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு அங்கே பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் 11.10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய நிதி 2023-24 ன் கீழ் 11.10 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்க விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பேருந்து நிலையத்தின் பணிகளை வெற்றிகரமாக தொடங்கி வைத்தார்.

தற்போது இந்த பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *