திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில்
வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுவதாலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த திருக்கோவில் என்பதாலும் தமிழக மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதோடு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் வந்து செல்வது வழக்கம்.
இவ்வாறு பல இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்றவற்றை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி உண்டியலில் போடுவது வழக்கம் – மாதம் தோறும் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வமுடைய பக்தர்களை கொண்டு எண்ணுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று காலை முதல் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் சுமார் 40க்கும் அதிகமானோர் காணிக்கைகளை என்னும் பணியில் ஈடுபட்டனர் .
இதில் 65,25,800 ரூபாய் பணமும் – தங்கம் 112 கிராம்,வெள்ளி 1123 கிராம் மற்றும் 1088 வெளிநாடு ரூபாய் தாள்களும் கிடைக்கப் பெற்றுள்ளது என கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.