தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்டத்தில் பகுதி வாரியாக போராட்டம் நடந்தது.
மலைக்கோட்டை பகுதி சார்பில் மலைக்கோட்டை தபால் நிலையம் முதல் சென்னை சில்க்ஸ் வரை அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக அமைப்புச்
செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் ஐயப்பன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், ஐடி பிரிவு வெங்கட், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், சுரேஷ் ஜெயராமன், கங்கை மணி, மற்றும் எனர்ஜி அப்துல் ரகுமான் உள்பட
ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.