திருச்சி பொன்மலை C type பகுதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம் நூற்றாண்டு பழமையான ஆலயமாகும். ரயில்வே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் என்பது அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இத்தகைய புகழ்வாய்ந்த இவ்வாலய கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவானது கடந்த 22 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
23ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையும், 24 ஆம் தேதி மூன்றாம் நாள், நான்காம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
முன்னதாக மங்கல இசை ஒலிக்க அதிர் வேட்டுகள் முழங்க வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் உச்சரிக்க கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தமானது கலசங்களில் ஊற்றப்பட்டு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனின் திருநாமத்தை உச்சரித்து முத்துமாரியம்மன் அருளுக்கு பத்திரமாயினர். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதேபோன்று தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.