திருச்சி துவாக்குடி அருகே உள்ள அசூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இருபத்தி மூன்றாம் தேதி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 24ம்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜையுடன் முதலாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை போது நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை நான்காம் யாகசாலை பூஜை நடைபெற்று
பின்னர் கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி வழிபட்டனர்.