திருச்சியில் கடந்த 05.11.2023ம் தேதி அமர்வு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம் ரோட்டில்
உள்ள ஹோட்டலில் ஸ்பா நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது ராஜாகாலனியை சேர்ந்த ராம்குமார் (47) மற்றும் 4 நபர்கள் பெண்கள் மற்றும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியவர்களை கைது செய்து நீதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராம்குமார் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால் ராம்குமார் மீது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, ராம்குமாரை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள ராம்குமார் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு
சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
