கடந்த சில நாட்களாக திருச்சியில் “ஹான்ஸ்”போட்டுகிட்டு கிரிக்கெட் விளையாடும் வாலிபரின் வீடியோ வைரலானது. அதாவது ரோட்டில் கிரிக்கெட் விளையாடும் சில இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்யும் போது பந்துகளை மிஸ் செய்வதும்,
பின்னர் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் “ஹான்ஸ்”பாக்கெட்டை எடுத்து பின்னர் வாயின் பக்கவாட்டில் ஹான்சை அடைத்துக்கொள்வதும் பின்னர் புத்துணர்ச்சியாகி சிக்ஸ் அடிப்பது போலவும் இருந்த அந்த இன்ஸ்டா வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியாகினர். இந்த வீடியோ தொடர்பாக திருச்சி எஸ்பி வருண்குமாரின் கவனத்திற்கு செல்ல உடனடியாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை துவக்கினர். சம்மந்தப்பட்ட வீடியோவை திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த ஜம்புநாதபுரம் போலீசுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன்(22) எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.
ஹான்ஸ் போட்டுகிட்டு கிரிக்கெட் வீடியோ வெளியிட்ட விக்னேஸ்வரன் கல்லூரியில் படித்து வருவதால் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் வேண்டாம் என முடிவு செய்த திருச்சி எஸ்பி வருண்குமார் விக்னேஸ்வரனையும் குடும்பத்தாரையும் அழைத்து அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார்.