மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசி பதிவிட்டதற்கு கைது செய்யப்பட்டார். அதிலிருந்து அவர் (எஸ்.பி வருண்குமார்)மீது நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் குடும்பத்தாரையும் அவரையும் தரக்குறைவாக ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் எஸ் பி வருண்குமார் 51 பேருடைய எக்ஸ் கணக்குகளை வெளியிட்டார். இவை அனைத்தும் போலியானவை வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இந்த கணக்குகள் இயங்குவதாகவும் பதிவில் குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது எஸ்.பி யின் தனிப்படை மற்றும் சைபர் கிரைம் போலீசார் சம்மந்தப்பட்ட எக்ஸ் பக்கத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
அந்த வகையில் ஒரு ஐடியை விசாரித்த போது அது சிறுவன் ஒருவனால் நடத்தப்பட்ட எக்ஸ் பக்கம் என்பது தெரியவந்தது. அந்த சிறுவன் எந்த விபரமும் தெரியாமல் எஸ்பி மற்றும் அவர்களது குடும்பத்தார் பற்றி விமர்சனம் செய்துளளான். அந்த சிறுவனையும் அவனது பெற்றோரையும் நேரில் அழைத்து வர சொல்லி உத்தரவிட்டிருந்தார் எஸ்பி வருண்குமார். அந்த சிறுவனும் தாயும் வந்த நிலையில் மனதளவில் உங்கள் மகனை நல்ல கருத்துக்களை குறிப்பிட்டு திருத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். தவறை உணர்ந்து இனிமேல் இது போன்ற செயல்களை செய்ய மாட்டேன் தனக்கும் ஒரு தங்கை உள்ளதாகவும் கூறிய சிறுவனுக்கும் அட்வைஸ் அனுப்பி வைத்து அனுப்பி வைத்தார் திருச்சி எஸ்பியான டாக்டர் வருண்குமார் ஐபிஎஸ்..