திருச்சி லால்குடி நகர பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் போதை விழிப்புணர்வு தொடர்பாக நேரிடையாக பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளி
மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி, முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமாருக்கு சால்வை அணிவித்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.