திருச்சி, புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விடியா ஆட்சியில் விஷம் போல் ஏறிவரும் கடுமையான விலைவாசி உயர்வு, அைனத்து வரிகளும் பல மடங்கு உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விவசாயிகள் விரோத போக்கு, பெருகிவரும் கள்ளச்சாராயம், கஞ்சாபோதை பொருட்கள் விற்பனையை தடுக்க தவறிய மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை கண்டன தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி ஒன்றிய செயலாளர்கள்சூப்பர் நடேசன் ,டி என் சிவகுமார் ,அசோகன் பொன்னி சேகர் பிச்சப்பிள்ளை ,ஜேக்கப் பொதுக்குழு உறுப்பினர் விஜயா ,ஐ டி வி சுரேஷ் தர்மதுரை, தாமஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.