Skip to content
Home » பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

பெல் சந்தை தொடர திருச்சி அதிமுக கோரிக்கை..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார்  வெளியிட்டுள்ள அறிக்கை.. . திருச்சிராப்பள்ளி மாவட்டம். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி. BHEL வளாகத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தையானது நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பல்வேறு விதமான வீட்டு உபயோக பொருட்கள், காய்கறிகள், தானியங்கள், மீன். முட்டை, போன்ற உணவு பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களும் கொண்டு வந்து சந்தைபடுத்தபட்டு வியாபாரிகளுக்கும். உபயோகிப்பவர்களும் 100% பயன்படுகின்ற வகையில் வாரச்சந்தை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் சந்தை நடைபெறும் நாட்களில். பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் குடும்பங்களும், இந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த சந்தையின் காரணமாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பொருளாதாரமும் வெகுவாக வளர்ச்சியடைந்து வருகின்ற சூழ்நிலையில், திமுகவை சார்ந்த அரசு பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை இந்த சந்தையை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற தீய நோக்கத்தில் கடந்த இரண்டு த பல்வேறு இடையூறுகளை கொடுத்து வருகின்றனர். காலமாக செயல்பட்டு பெல் தொழிலாளர்களுக்கும், அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் மிகுந்த பயன் தரும் வகையில் பல வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கு மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி ஆவண செய்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது போன்ற மக்கள் விரோத போக்கு தொடருமேயானால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமானது பொது மக்களுடனும், தொழிலாளர்களுடனும் இணைந்து மாபெரும் மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ளும் என்பதனையும் தெரிவித்துக்காௌ்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *