திருச்சி, பீமநகரில் செடல் மாரியம்மன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் 2013-ல் சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் கல்வெட்டினை சில சமூக விரோதிகள் இடித்து சுக்குநூறாக உடைத்துள்ளனர். இதனை இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன் மற்றும் காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முரளி ஆகியோர் நேரில் பார்வையிட்டு பாலக்கரை காவல் நிலையத்தில் கல்வெட்டை இடித்த சமூகவிரோதிகளை கைது செய்ய கோரி மனு அளித்தனர்.
