திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விண் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) லட்சுமி (44) தம்பதி இவர்களது மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் இந்த நிலையில் பெண்ணின் தரப்பினர் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாததோடு பெண் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தரேஷ்குமார் திடீரென நேற்று முன்தினம் காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமாரும் லட்சுமியும் தனது மகனே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் பொழுது நாம் மட்டும் உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறோம் என சுரேஷ் குமாரும் லட்சுமியும் விஷம் குடித்துள்ளனர் அவர்கள் மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவர்கள் மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.