திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலையம் முன்பு நேற்று சிறை காவலர் ராஜா என்பவர் தீக்குளித்த விவகாரத்தில் எஸ்.ஐஆக பணிபுரிந்து வந்த பொற்செழியன் பணிஇடை நீக்கம் செய்து திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
தீக்குளித்த ராஜா கடந்த மாதம் கொடுத்த புகாரை எஸ்ஐ பொற்செழியன் முறையாக விசாரிக்காததால் ராஜா தீக்குளித்ததாக கூறப்பட்ட நிலையில் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தீக்குளித்த ராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினைர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் .