யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சார்பில் இன்று உலக முழுவதும் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7000க்கு மேற்பட்ட விரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலைப்பட்டி சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி தமிழக சிலம்பம் சங்கத்தின் மாநில தலைவரும், பயிற்சியாளருமான கந்தமூர்த்தி தலைமையில் பொன்மலையில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 30 வீரர் – விராங்கனைகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சி ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடம் 23
நொடிகள் தொடர்ந்து சிலம்பம் பல்வேறு முறையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை பார்வையாளராக நாமக்கல் சந்துரு கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியை அங்கிகரித்து வீரர் – விராங்களை களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.சிறப்பு விருந்தினரர்களாக தமிழ்நாடு காட்டு நாயக்க சங்க மாநில துணைத் தலைவர்கள் கலியபெருமாள், மற்றும் ஆறுமுகம், தமிழ்நாடு காட்டு நாயக்க சங்க கிளை செயலாளர் மணிகண்டன்
தொழிலதிபர் பிரியாகுமார், மற்றும் வீரர் – வீராங்கனைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.