மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன் ,சௌந்தர பாண்டியன் மற்றும் திருச்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த்,
பகுதி செயலாளர்கள் கமால், மோகன்தாஸ், ராம்குமார், மற்றும் கோட்ட தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.