விழுப்புரம் வன சரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த எதிரிகளை துப்பு வைத்து பிடித்தும், விழுப்புரம் வன சரகத்தின் கடந்த 14.11.2024-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் குற்றவாளிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு தெரியவந்தது . இதன் அடிப்படையில் இந்த வழக்கில் 13-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேற்படி குற்ற சம்பவத்தில் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை அவரது உறவினரிடம் இருந்து பெற்று குற்றவாளிகள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடந்த 25.11.2024-ஆம் தேதி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 14.12.2024-ஆம் தேதி மேற்படி வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு விழுப்புரம் வன சரகத்தின் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் அவ்வழக்கில் தொடர்புடையவர் 67600 என உறுதி செய்யப்பட்டதால் விழுப்புரம் வன சரக அதிகாரிகள் மணிவண்ணனை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.