Skip to content

ஒரு வருடம் தலைமறைவான பாலியல் வழக்கு கைதி சென்னையில் கைது

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்த ராஜா    என்பவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் கடந்த 2021 ம் வருடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு  மைனர் பெண்ணுடன் பழகி  அவரை  கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து விஜயைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜாமினில்  வந்த விஜய் திடீரென தலைமறைவானார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது. இதன்படி, கடந்த ஒரு வருடம் 46 நாட்களாக தலைமறைவாக விஜய் இருப்பதை அறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் உத்தரவின்படி துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் சென்னை நெற்குன்றத்தில் தலைமறைவாக இருந்த விஜயை நேற்று கைது செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின்படி விஜயைப் போலீசார் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!