திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பெரியார் தெரு பகுதியில் ஒரு தனியார் சீட்டு கம்பெனி செயல்பட்டு வந்தது இதனை அதே பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் நிலோபர் திருச்சி உடையான் பட்டி மெயின் ரோடு ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாபர் அலி மஸ்ஜித் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்தனர். இதில் காந்திநகர் எம்ஜிஆர் தெரு பகுதியைச் சேர்ந்த சின்னய்யா மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரைச் சார்ந்த 35 பேர் சேர்ந்து
ரூபாய் 36 லட்சத்து 1275 ரூபாய் செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் திடீரென பாபர் அலி மும்தாஜ்க்கு சொந்தமான சீட்டு கம்பெனி அலுவலகத்தை காலி செய்யும் தகவல் வெளியானது இதனை கேள்விப்பட்டு விஜயலட்சுமி அங்கு சென்றார். பின்னர் அவர் தான் செலுத்திய சீட்டுப் பணத்துக்கு பதில் சொல்லுங்கள் என கூறியுள்ளார் அப்போது பாபர் அலி மற்றும் மேற்கண்ட நான்கு பேரும் சீட்டு பணத்தை தர முடியாது எனக்கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.