Skip to content
Home » திருச்சி அருகே நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி அருகே நல்ல செல்லியம்மன் கோவிலில் வருட பூர்த்தி அபிஷேகம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பி்கே அகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு நல்ல செல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கணபதி, ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ முத்தையன் கருப்பு,ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ செங்கமலையார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு வருட பூர்த்தி அபிஷேகம் மற்றும் நவசண்டி ஹோம விழாவை முன்னிட்டு கொள்ளிடம் தென்கரையிலிருந்து யானையில் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

சோழவள நாட்டில் காவிரிக்கு வடபால் அகிலமெங்கும் சக்தி ஒளி வீசும் முக்தி அருள் பாலிக்கும் சமயபுரம் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வடக்கில் பிகே அகரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நல்ல செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ முத்தையன் கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன்,ஸ்ரீ அய்யனார் கோவில்.இக்கோயிலில் வருட பூர்த்தி அபிஷேகம் மற்றும் நவசண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இவ்விழாவையொட்டி இன்று காலை கொள்ளிடம் தென்கரையிலிருந்து யானையில் தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், பூர்வாங்க அனுக்ஞை, விக்னேஸ்வரா

பூஜை, வேதபாராயணம், கனகதார ஹோமம், திரவிய ஹோமம், மூலிகை ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. நாளை ஸ்ரீ அய்யனாருக்கு வருட பூர்த்தி அபிஷேகமும், ஸ்ரீ நல்ல செல்லியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருட பூர்த்தி அபிஷேகமும்,11 ந்தேதி நவாசண்டி ஹோமமும் நடைபெற உள்ளது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் செய்தனர். 3 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அனைத்து கிராம மக்களுக்கும் பக்தர்களுக்கும் மூன்று நாட்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் களப்பாலுடையான் கோத்திர குடிமக்கள், கோயில் பணியாளர்கள் கிராம பொதுமக்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *