தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பொதுவாக ஜூன் ஒன்று அல்லது இரண்டாம் தேதிகளில் பள்ளி திறப்பு இருக்கும்
ஆனால் இந்த ஆண்டு சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறையாததால் இந்த ஆண்டு 12 நாட்கள் கூடுதலாக விடுமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அந்த வகையில் நீண்ட நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்பு இன்று துவங்கியது.